பாரீஸ் ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்..?

பாரீஸ் ஒலிம்பிக் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
பாரீஸ் ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்..?
Published on

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதன் தொடக்க விழா அணிவகுப்பு அங்குள்ள சென் நதியில் அமர்க்களமாக அரங்கேறியது. படகுகள் மூலம் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள் அணி வகுத்தனர். உலகின் மிகப்பெரிய இந்த விளையாட்டு திருவிழா இன்று விமரிசையாக நிறைவு பெறுகிறது.

தற்போது வரை போட்டிகளின் முடிவில் 39 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம் என 90 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 38 தங்கம் உட்பட 122 பதக்கங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது. பதக்க பட்டியலில் முதலிடத்தை பெற இவ்விரு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

பதக்க பட்டியலில் இந்திய அணி 1 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களுடன் 71 வது இடத்தில் உள்ளது. இந்தியா இம்முறை இரட்டை எண்ணிக்கை அளவிலான பதக்கத்தை வெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com