பாரீஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டனில் சிந்து அதிர்ச்சி தோல்வி

2020-ம் ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜியாவோவை வீழ்த்தி சிந்து வெண்கலம் வென்றார்.
பாரீஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டனில் சிந்து அதிர்ச்சி தோல்வி
Published on

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தின சுற்றில் இந்தியாவின் வீராங்கனையான பி.வி. சிந்து, சீன வீராங்கனையான ஹி பிங் ஜியாவோ என்பவரை எதிர்த்து விளையாடினார்.

இந்த போட்டியில், 21-19, 21-14 என்ற செட் கணக்கில், சிந்துவை வீழ்த்தி ஜியாவோ வெற்றி பெற்றார். இதற்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றிருந்த சிந்து இந்த முறை தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

2020-ம் ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜியாவோவை வீழ்த்தி சிந்து வெண்கலம் வென்றார். அடுத்து ஆகஸ்டு 3-ல் நடைபெறும் போட்டியில் சீனாவின் சென் யுபெய் என்பவரை எதிர்த்து ஜியாவோ விளையாடுவார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com