பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஜோகோவிச் இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் நேற்று நடைபெற்ற டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரரான லொரன்சோ முசெட்டி உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-4 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் இறுதிப்போட்டியில் தனது சமகால எதிரியான கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com