தமிழகம் முழுவதும் சி-விஜில் செயலி மூலம் 2 ஆயிரம் புகார்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை படம் பிடித்து புகார் செய்வதற்கு சி-விஜில் என்ற செயலி வசதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் வரும் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை படம் பிடித்து புகார் செய்வதற்கு சி-விஜில் என்ற செயலி வசதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.

அந்த வகையில் கடந்த மார்ச் 16-ந் தேதியில் இருந்து இந்த செயலி மூலம் பலர் புகார்களை அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை 2,193 புகார்கள் இந்த செயலிக்கு வந்துள்ளன. அவற்றில் 1,694 புகார்களின் உண்மைத்தன்மை அறியப்பட்டு ஏற்கப்பட்டன. அதில் பெரும்பாலானவை, சுவர் விளம்பரங்கள் தொடர்பானவையாகும்.

மாவட்ட அளவில் அதிகபட்சமாக கரூரில் இருந்து 408 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 372 புகார்கள் ஏற்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து எந்த புகாரும் பெறப்படவில்லை. திருவாரூரில் இருந்து 4 புகார்கள் பெறப்பட்டு உண்மைத்தன்மை இல்லை என்று நான்குமே கைவிடப்பட்டன.

சென்னை மாவட்டத்தில் 239 புகார்கள் பெறப்பட்டதில் 209 ஏற்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 62 புகார்கள் பெறப்பட்டு 43 புகார்களும்; காஞ்சீபுரம் மாவட்டத்தில் 92 புகார்கள் பெறப்பட்டு 90 புகார்களும்; திருவள்ளூர் மாவட்டத்தில் 71 புகார்கள் பெறப்பட்டு 53 புகார்களும் ஏற்கப்பட்டன.

இந்தத் தகவலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com