கல்லாற்றில் தடுப்பு அணை அமைக்கப்படும்: பாரிவேந்தர் உறுதி

தன்னை தேர்ந்தெடுத்தால் கல்லாற்றில் தடுப்பு அணை அமைக்கப்படும் என பாரிவேந்தர் வாக்குறுதிகள் அளித்தார்
கல்லாற்றில் தடுப்பு அணை அமைக்கப்படும்: பாரிவேந்தர் உறுதி
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் புலாம்பாடி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறியதாவது ,

வரும் தேர்தலில் தன்னை தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக ரெயில்வே திட்டம் நிறைவேற்றப்படும். தொடர்ந்து 1,200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் தொடரும். 1,500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என வாக்குறுதிகள் அளித்தார். கல்லாற்றில் தடுப்பணை, அரசு ஜவ்வரிசி ஆலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ், ஓ.பி.எஸ் அணி மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com