புல்லட்டை விட வலிமை வாய்ந்தது வாக்கு - நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
புல்லட்டை விட வலிமை வாய்ந்தது வாக்கு - நடிகர் சிவகார்த்திகேயன்
Published on

சென்னை,

அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்து மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அதனைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில்,

வாக்கு நமது உரிமை, வாக்களிப்பது நமது கடமை. ஆபிரகாம் லிங்கன் கூறியதுபோல் புல்லட்டை விட வலிமை வாய்ந்தது வாக்கு. வாக்கு செலுத்தினால்தான் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க முடியும். இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com