மதுரா தொகுதியில் நடிகை ஹேமமாலினி முன்னிலை

மதுரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஹேமமாலினி முன்னிலை பெற்றுள்ளார்.
மதுரா தொகுதியில் நடிகை ஹேமமாலினி முன்னிலை
Published on

வாரணாசி,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை ஹேமமாலினி போட்டியிட்டார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முகேஷ் தங்கர் களமிறக்கப்பட்டார்.

தற்போதைய நிலவரப்படி மதுரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஹேமமாலினி 1 லட்சத்து 71 ஆயிரத்து 839 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் முகேஷ் தங்கர் 58 ஆயிரத்து 686 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com