அ.தி.மு.க , தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களால் மதுரை வளர்ச்சி அடையவில்லை - அமித் ஷா

பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்
அ.தி.மு.க , தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களால் மதுரை வளர்ச்சி அடையவில்லை - அமித் ஷா
Published on

மதுரை,

மதுரை நேதாஜி சாலையில் உள்துறை மந்திரி அமித்ஷாவின் ரோடு ஷோ நேற்று நடைபெற்றது. மதுரை பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். சாலையில் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள், பா.ஜ.க.வினர் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளித்தனர்.கொடிகளை ஏந்தியவாறு உற்சாகத்துடன் கையசைக்கும் தொண்டர்களின் வரவேற்பை அமித்ஷா ஏற்றார். மதுரை நேதாஜி சாலையில் தொடங்கிய வாகனப்பேரணி ஆவணி மூல வீதி வழியாக சென்று நிறைவடைந்தது.

இந்த நிலையில் அமித் ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அ.தி.மு.க , தி.மு.க.ஆட்சியில் நடந்த மாபெரும் ஊழல்களால் மதுரை வளர்ச்சியை அடைய முடியவில்லை. பா.ஜ.க.வுக்கு வாய்ப்பளிக்கவும், தாமரையை மலரச் செய்யவும், மோடி உத்தரவாதத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என மதுரை மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com