மதுரையில் அமித்ஷா ரோடு ஷோ - பொதுமக்கள், பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு

மதுரை பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
மதுரையில் அமித்ஷா ரோடு ஷோ - பொதுமக்கள், பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு
Published on

மதுரை,

மதுரை நேதாஜி சாலையில் உள்துறை மந்திரி அமித்ஷாவின் ரோடு ஷோ நடைபெற்றது. மதுரை பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். சாலையில் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள், பா.ஜ.க.வினர் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

கொடிகளை ஏந்தியவாறு உற்சாகத்துடன் கையசைக்கும் தொண்டர்களின் வரவேற்பை அமித்ஷா ஏற்றார். தொண்டர்கள் தந்த தாமரை மாலை, தலைப்பாகையை வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு அமித்ஷா அணிவித்தார். மதுரை நேதாஜி சாலையில் தொடங்கிய வாகனப்பேரணி ஆவணி மூல வீதி வழியாக சென்று நிறைவடைந்தது. 

வாகனப்பேரணி நிறைவில் அமித்ஷா பேசியதாவது:-

தமிழக வளர்ச்சியில், நலனில் அக்கறை செலுத்தும் கட்சி பா.ஜனதா. தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com