ஆந்திராவில் மகளிருக்கு ரூ.1 லட்சம் அறிவிப்பு: தேர்தல் வாக்குறுதியை அறிவித்த காங்கிரஸ்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அமராவதி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆந்திராவில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

அதில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும். மகளிர் உரிமை தொகை திட்டமாக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 50 சதவீதமாக உயர்த்தப்படும்.

மழலையர் கல்வி முதல் இளங்கலை படிப்புவரை இலவச கல்வி வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com