ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார் குலாம் நபி ஆசாத்

நாடாளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார் குலாம் நபி ஆசாத்
Published on

ஸ்ரீநகர்,

நாடாளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.ஜம்மு காஷ்மீரில் 3வது கட்டமாக மே 7-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அங்கு முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத். 2022-ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி ஜனநாயக முற்போக்கு விடுதலை என்ற கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் குலாம் நபி ஆசாத் ரஜோரி மாவட்டம் அனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று ஜனநாயக முற்போக்கு விடுதலை கட்சியின் தலைவர் தாஜ் மொகிதீன் கூறியுள்ளார். 2014-ம் ஆண்டு உதம்பூர் தொகுதியில் பா.ஜ.க தலைவர் ஜிதேந்திர சிங்கிடம் தோல்வியடைந்த ஆசாத் சந்திக்கும் முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com