வடக்கு மும்பை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பியூஷ் கோயல் வேட்புமனு தாக்கல்

வடக்கு மும்பை மக்களவை தொகுதி வேட்பாளர் பியூஷ் கோயல் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
வடக்கு மும்பை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பியூஷ் கோயல் வேட்புமனு தாக்கல்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி மே 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் வடக்கு மும்பை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக மத்திய மந்திரி பியூஷ் கோயல் போட்டியிடுகிறார்.

வடக்கு மும்பை மக்களவை தொகுதிக்கு வரும் மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு பியூஷ் கோயல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பியூஷ் கோயல் இன்று பாந்த்ரா தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com