மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு

மன்சூர் அலிகான் மீது விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு
Published on

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி கட்சி விளம்பரங்களை சுவர்களில் வரைவது, கட்சி கொடி கம்பங்கள் நடுவது, அனுமதியின்றி ஊர்வலம் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் பொய்கை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சுற்றியுள்ள சுவர்களில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சம்பந்தப்பட்ட சுவர் விளம்பரங்கள் மற்றும் கட்சி சின்னங்கள் வரைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்த பொய்கை கிராம நிர்வாக அலுவலர் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விரிஞ்சிபுரம் போலீசார் இது தொடர்பாக இந்திய ஜனநாயக கட்சி தலைவர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com