அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியை தோற்கடித்தார் காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா

அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா வெற்றி பெற்றார்.
KL Sharma defeated Smriti Irani in Amethi
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஸ்மிரிதி இரானி போட்டியிட்டார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கே.எல்.சர்மாவை அமேதி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. முன்னதாக அமேதி தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவை தேர்தலில் அமேதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.

இந்த முறை தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து பா.ஜ.க.வினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா 5,39,228 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் ஸ்மிரிதி இரானி 3,72,032 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

இது குறித்து ஸ்மிரிதி இரானி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சிக்காக உழைத்த பா.ஜ.க. உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். அமேதி தொகுதி மக்களுக்காக எனது சேவையை தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com