பரபரக்கும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி: பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் தலைவர்

பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தான் பா.ஜனதாவில் இணைந்ததாக சுதாகரன் தெரிவித்தார்.
பரபரக்கும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி: பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் தலைவர்
Published on

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் வயநாட்டுக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்து விட்டு சென்றார்.

இதற்கிடையே வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சுதாகரன் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மாவட்ட பா.ஜனதா தலைவர் பிரசாந்த் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களால் ஈர்க்கப்பட்டு நான் பா.ஜனதாவில் இணைந்தேன். இதில் அரசியல் எதுவும் இல்லை. வயநாட்டில் பா.ஜனதா வெற்றி பெற பாடுபட போகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக ராகுல்காந்தி தொகுதிக்கு வருவது இல்லை. மாவட்ட தலைவரான எனக்கே அவருடன் போதிய தொடர்பு இல்லை. சாதாரண மக்கள் எப்படி அவரை அணுகி தங்களது கோரிக்கைகளை முன் வைக்க முடியும்?' என்றார். வருகிற 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com