வாக்கு சேகரிப்பின்போது கிளி ஜோதிடம் பார்த்த தங்கர்பச்சான்

கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்தது.
வாக்கு சேகரிப்பின்போது கிளி ஜோதிடம் பார்த்த தங்கர்பச்சான்
Published on

கடலூர்,

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பிரபல சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு இருந்த கிளி ஜோதிடர், தன்னிடம் ஜோதிடம் பார்க்கும் படி கேட்டுக்கொண்டார். அதற்கு சம்மதித்த தங்கர்பச்சான் அங்கு அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்தார். இதில் கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்தது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார்.

பின்னர் அவர் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று, மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.   

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com