தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் வெற்றி

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றுள்ளார்.
தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் வெற்றி
Published on

தஞ்சாவூர்,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றுள்ளார்.

முரசொலி (திமுக) - 4,69,232

சிவநேசன் (தேமுதிக) - 1,70,619

முருகானந்தம் (பாஜக) - 1,60,582

ஹமாயுன் கபிர் (நாதக) - 1,10,868 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com