தி.மு.க.விற்கு வாக்களித்து வீணாக்காதீர்கள்: பாரிவேந்தர் பேச்சு

மக்களவை தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெற்றால், 1,500 குடும்பங்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை இலவசமாக கொடுப்பேன் என பாரிவேந்தர் பேசினார்.
தி.மு.க.விற்கு வாக்களித்து வீணாக்காதீர்கள்: பாரிவேந்தர் பேச்சு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவர் மண்ணச்ச நல்லூர் அருகே திருவெள்ளறை கிராமத்தில் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 2019 தேர்தலில் வெற்றி பெற்று, பல பள்ளிகளுக்கு புதிய - வகுப்பறை கட்டடங்கள், தண்ணீர் தொட்டிகள், சாலைகள், சமுதாயக் கூடங்களை கட்டித் தந்தேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் ஆயிரத்து 200 பேருக்கு இலவசமாக உயர்கல்வி வழங்கியுள்ளேன்.

வரும் மக்களவை தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெற்றால், 1,500 குடும்பங்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை இலவசமாக கொடுப்பேன். தி.மு.க.வுக்கு நீங்கள் ஓட்டு போட்டால் உங்களுக்கு பாவம் தான் வந்து சேரும். கடந்த தேர்தலில் 6 லட்சம் வாக்குகள் பெற்று, 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.' மண்ணச்சநல்லூர் தொகுதியில் தான் அதிக வாக்குகள் பெற்றேன்.

தி.மு.க.விற்கு வாக்களித்து உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள். அவர்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.

அரியலூர், பெரம்பலூர், துறையூர் மற்றும் நாமக்கல் ஆகிய பகுதிகளை இணைத்து புதிய ரெயில் பாதை கொண்டு வருவேன். இந்த முறை மீண்டும் 1,200 மாணவர்களை இலவசமாக உயர்கல்வி படிக்க வைப்பேன். தி.மு.க. அமைச்சர் நேரு அரசியலுக்கு வரும் போது, 2 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்தார். ஆனால் தற்போது, 500 ஏக்கர் நிலம் வைத்துள்ளார்." இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com