தேர்தல் போட்டியில் இருந்து குலாம் நபி ஆசாத் திடீர் விலகல்

ஆனந்த்னாக்-ரஜோரி தொகுதியில் மெகாபூபா முப்தி போட்டியிடுகிறார்.
தேர்தல் போட்டியில் இருந்து குலாம் நபி ஆசாத் திடீர் விலகல்
Published on

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் 2022ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின், தனிக்கட்சி தொடங்கினார். அவர் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத் அனந்த்னாக்-ரஜோரி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் போட்டியிடவில்லை என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை. அவருக்குப் பதிலாக சலீம் பர்ரே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிடிபி கட்சி தலைவர் மெஹபூபா முப்தி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மியான் அல்டாப் போட்டியிடுகிறார்."சில விசயங்களை குலாம் நபி ஆசாத் தெரிவித்திருந்தார். அதன்பின் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என அக்கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் ஆசாத் கட்சி சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் தைரியம் இருந்தால் தன்னை எதிர்த்து பாரமுல்லா தொகுதியில் போட்டியிடட்டும் பார்க்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.அதற்கு உமர் அப்துல்லாவை ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா பயணி என அழைத்தார். அவர் கோடைகாலத்தை லண்டனிலும், குளிர்காலத்தை வெப்பமான இடங்களிலும் கழிக்கிறார் என விமர்சித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com