மோடி மீண்டும் பிரதமரானால் நம் நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும் - அண்ணாமலை

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மோடி மீண்டும் பிரதமரானால் நம் நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும் - அண்ணாமலை
Published on

ஈரோடு,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடியில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அண்ணாமலை பேசியதாவது,

திருப்பூர் தொகுதியில் மாற்றம் வரவேண்டும். வளர்ச்சி எல்லா பகுதிக்கு வர வேண்டும். தமிழகத்தின் அரசியல் களத்தை அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறோம்.இந்தியாவில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும். மக்களுக்கு யார் நல்லது செய்ய வேண்டும் என்பதற்கான தேர்தல். பா.ஜ.க. பேருந்து மட்டும் டெல்லி நோக்கி சென்று கொண்டு உள்ளது. மற்ற எதிர்கட்சிகள் பேருந்து எங்கே போவது என்று தெரியாமல் உள்ளார்கள்.

இந்திய பொருளாதார உயர்வு, 2014-ம் ஆண்டில் உலகத்தில் 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு வந்தது.இந்திய கூட்டணி பொருளாதார வளர்ச்சி கொடுக்க முடியுமா என்று சிந்தித்து பார்க்க சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து சமூக நீதி குறித்து சொல்ல வேண்டும்.ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 4 ஜாதிகள் தான் மோடி நம்புகிறார்.48 லட்சம் விவசாயிகளுக்கு வருடம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 89,490 விவசாயிகள் திருப்பூர் மாவட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள்.

இதன் மூலம் 30 ஆயிரம் வங்கி கணக்கு வந்துள்ளது.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. ஆனால் மோடி சொல்லாமல் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைத்து வருகிறார்.

நரேந்திர மோடி மீண்டும் நம் நாட்டின் பிரதமராக வந்தால் நமது நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும்.வலிமையான நாட்டை மோடி அரசு உருவாக்கி உள்ளது. தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு இதுவரை எந்த பிரதமரும் கொடுக்காத அங்கீகாரத்தை மோடி கொடுத்துள்ளார்.மோடி சாமானிய மகனாக இருந்து உழைப்பு மூலம் வளர்ந்து வருகிறார். என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com