தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
DMK candidate Kanimozhi
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 3 லட்சத்து 30 ஆயிரத்து 826 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதன்படி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதேசமயம் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 99,442 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

நாதக (ரொவினா ருத் ஜேன்) - 78,986

தமாகா (விஜயசீலன்) - 74,478

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com