இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - ராகுல் காந்தி உறுதி

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அமராவதி (மராட்டியம்),

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முன்னுரிமை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, "உலகில் எந்த சக்தியாலும் இந்திய அரசியலமைப்பை மாற்ற முடியாது. மோடி தனது 22 தொழிலதிபர் நண்பர்களுக்கு மட்டுமே உதவி செய்தார். அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்தார். பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 22-25 பேர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். எங்கள் ஆட்சிக்கு வாக்களித்தால், இந்திய கூட்டணி கோடிக்கணக்கான 'லட்சாதிபதிகளை' உருவாக்கும்.

எதிர்கட்சியான இந்திய அணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், நடந்து வரும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில் மகாலக்ஷ்மி திட்டம் மற்றும் தொழிற்பயிற்சிக்கான உரிமை ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளது.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மகாலக்ஷ்மி திட்டம், பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் ஓராண்டு காலப் பயிற்சி பெற்று அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தொழிற்பயிற்சி உரிமை. நாட்டின் முகத்தை மாற்றி கோடிக்கணக்கான "லட்சாபதிகளை" உருவாக்கும்.

விவசாயிகளின் பயிர்க்கடன்களை எப்போது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது குறித்து ஆணையம் அமைக்கப்படும். இந்திய கூட்டணி அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும்.

இந்தியக் கூட்டணி அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது, அதேசமயம் மோடி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகின்றன.

உலகில் உள்ள எந்த சக்தியாலும் நமது அரசியலமைப்பை மாற்ற முடியாது என்ற செய்தியை மராட்டியம் மற்றும் முழு நாட்டிற்கும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்" என்று ராகுல் காந்தி கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com