'தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதை ஊழலாக கருத முடியாது' - தமிழிசை சவுந்தரராஜன்

தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
'தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதை ஊழலாக கருத முடியாது' - தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தென்சென்னை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கோடம்பாக்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தேர்தல் பத்திரங்கள் குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "தேர்தல் பத்திரம் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சிகள் பணம் பெற்றதால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதை சரிபார்க்க முடிகிறது. தேர்தல் பத்திரம் மூலம் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. மீது மட்டும் குற்றம் சுமத்துகிறார்கள். எதுவுமே கணக்கில் இருந்தால் அதை ஊழலில் கொண்டு வர முடியாது. தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளது. அதை ஊழலாக கருத முடியாது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com