ஜெகநாதர் கோவில் சாவிகளை பிரதமரே கண்டுபிடித்து தரட்டும் - வி.கே.பாண்டியன்

அசல் சாவிகள் தொகுப்பு இல்லை என்றாலும், நகல் சாவிகள் உள்ளதாக வி.கே.பாண்டியன் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புவனேஸ்வரம்,

ஒடிசாவில் பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிஜூ ஜனதா தளத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.கே.பாண்டியனை மறைமுகமாக தாக்கி பேசினார். தொலைந்துபோன புரி ஜெகநாதர் கோவில் சாவிகள் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று அவர் பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு வி.கே.பாண்டியன் பதில் அளித்து உள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "கோவிலின் பொக்கிஷ அறை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. பொக்கிஷ அறையை ஆய்வு செய்ய ஒடிசா ஐகோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி ஆய்வு செய்தபோதுதான் அறையின் சாவிகள் காணாமல் போனது தெரியவந்தது.

கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து, ஒடிசா அரசு கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அசல் சாவிகள் தொகுப்பு இல்லை என்றாலும், நகல் சாவிகள் உள்ளன. காணாமல் போன சாவிகள் குறித்து இப்போது பேசும் பிரதமர் மோடி, முடிந்தால் அவரே அந்த சாவியை கண்டுபிடித்து தரட்டும். கோவில் விழாவையொட்டி பொக்கிஷ அறை திறக்கப்படும். அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com