மராட்டிய மாநிலம்: பாராமதி தொகுதியில் போட்டியிட சுப்ரியா சுலே வேட்பு மனு தாக்கல்

பாராமதி தொகுதியில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) கட்சி எம்.பி. சுப்ரியா சுலே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மராட்டிய மாநிலம்: பாராமதி தொகுதியில் போட்டியிட சுப்ரியா சுலே வேட்பு மனு தாக்கல்
Published on

மும்பை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி(நாளை) தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன்படி, மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள பாராமதி தொகுதிக்கு மே 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், பாராமதி தொகுதியில் போட்டியிடுவதற்காக தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) கட்சி எம்.பி. சுப்ரியா சுலே இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2009, 2014 மற்றும் 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் இதே பாராமதி தொகுதியில் போட்டியிட்டு சுப்ரியா சுலே வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் 2024 மக்களவை தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் அவர் களமிறங்குகிறார்.

பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலேவை எதிர்த்து மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com