வாக்காளர் அடையாள அட்டை இல்லையா...? வேறு எந்த ஆவணங்களை எடுத்துச் செல்லலாம்..?

நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா...? வேறு எந்த ஆவணங்களை எடுத்துச் செல்லலாம்..?
Published on

சென்னை,

வாக்காளர்கள் ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம். அதன் விவரம் வருமாறு:-

1. ஆதார் அட்டை

2. பான் அட்டை

3. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை

4. வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய புத்தகம்.

5. தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை.

6. ஓட்டுனர் உரிமம்.

7. பாஸ்போர்ட்

8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை.

9. மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கான அட்டை.

10. மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com