பிரதமர் மோடி வருகை: அம்பையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
பிரதமர் மோடி வருகை: அம்பையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
Published on

நெல்லை,

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் நாளை மறுநாள் (15-ந்தேதி) நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருகை தருகிறார். இதனை முன்னிட்டு நெல்லை மாவட்ட காவல்துறை சார்பாக வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதேபோல் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரசார கூட்டத்திற்கு கலந்து கொள்ள வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டி பகுதியை சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால் அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com