ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஆர்.சர்மிளாவை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்க்கொள்ள உள்ளார்.
ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை
Published on

அமராவதி,

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெருகிறது. இதையடுத்து ஆந்திராவில் 3 கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திரி காங்கிரஸ் தலைவர் சர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்து கடப்பா தொகுதியில் இன்று ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து ஆந்திரா வந்த ராகுல் காந்தி இடுபுலுபாயாவில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்-மந்திரியுமான ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகரின் நினைவிடத்திற்கு சென்று அங்கு அவருக்கு மாரியாதை செலுத்தினார். இவருடன் ஒய்.எஸ்.ஆர்.சர்மிளா மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com