'சமத்துவத்தை ஏற்படுத்த அனைவரையும் ஏழையாக்க வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் தத்துவம்' - பசவராஜ் பொம்மை

அடிப்படை உத்தரவாதம் இல்லாத பேச்சுக்களை ராகுல் காந்தி பேசி வருகிறார் என பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
'சமத்துவத்தை ஏற்படுத்த அனைவரையும் ஏழையாக்க வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் தத்துவம்' - பசவராஜ் பொம்மை
Published on

பெங்களூரு,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கடக்-ஹாவேரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் லக்ஸ்மேஷ்வர் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"நாங்கள் பிரசாரத்திற்காக செல்லும் இடங்களில் எல்லாம், அனைத்து சமுதாய மக்களிடம் இருந்தும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. தேர்தலில் நாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

பா.ஜ.க.வின் வாக்குறுதிகள் அனைத்தும் நிரந்தரமானவை. ராகுல் காந்தி சமத்துவம் பற்றி பேசுகிறார். சமத்துவம் இரண்டு வகையானது. ஒன்று, ஏழைகளை பணக்காரர்களாக்குவது. மற்றொன்று, அனைவரையும் ஏழையாக்குவது. சமத்துவத்தை ஏற்படுத்த அனைவரையும் ஏழையாக்க வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் தத்துவம்.

அடிப்படை உத்தரவாதம் இல்லாத பேச்சுக்களை ராகுல் காந்தி பேசி வருகிறார். மக்கள் பாதுகாப்பான வாழ்க்கையை எதிர்பார்க்கின்றனர். மோடி மீண்டும் பிரதமரானால் மட்டுமே அந்த வாழ்க்கை கிடைக்கும்."

இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com