விஜய் கட்சியில் இணைந்து செயல்பட தயார் - ரவீந்திரநாத் எம்.பி. பேட்டி

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெறுவார் என்று ரவீந்திரநாத் எம்.பி. கூறியுள்ளார்.
விஜய் கட்சியில் இணைந்து செயல்பட தயார் - ரவீந்திரநாத் எம்.பி. பேட்டி
Published on

தேனி,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர் செல்வம் வெற்றி பெறுவார் என்றும், தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் டிடிவி. தினகரன் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பற்றி கேள்விக்கு பதிலளித்த ரவீந்திரநாத், ஜனநாயக நாட்டில் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அன்பு சகோதர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்.

யார் நலத்திட்டங்களை மக்களுக்கு செய்தாலும் நல்ல விஷயம்தான். விஜய் கட்சி தொடங்கியது அவரது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு பாதையை அவர் வகுத்து தந்தால் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார். போடி தொகுதி இடைத்தேர்தல் வந்தால் நிற்க வாய்ப்பு கிடைத்தால்  கண்டிப்பாக நிற்பேன் என்று உறுதிபட கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com