நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை...பா.ஜ.க.வில் இணைவதாக நடிகை சுமலதா அறிவிப்பு

பா.ஜ.க.வில் இணைவதாக நடிகை சுமலதா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை...பா.ஜ.க.வில் இணைவதாக நடிகை சுமலதா அறிவிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள மாண்டியா தொகுதி எம்.பி. யாக இருப்பவர் நடிகை சுமலதா. பா.ஜனதா ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால், வரும் தேர்தலிலும் சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாண்டியா தொகுதியை மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று இன்று நடிகை சுமலதா அறிவித்துள்ளார். அதனால், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் குமாரசாமியை ஆதரிப்பதாக மண்டியா தொகுதி மக்களவை தொகுதி உறுப்பினர் நடிகை சுமலதா இன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாண்டியா தொகுதியில் உள்ள காளிகாம்பா கோவிலில் ஆதரவாளர்களுடன் நடந்த கூட்டத்தில் நடிகை சுமலதா தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், "சுயச்சை வேட்பாளராக போட்டியிட்ட தன்னை வெற்றி பெற செய்த மாண்டியா மக்களை எப்போதும் மறக்கமாட்டேன். விரைவில் பா.ஜ.க.வில் இணைகிறேன்; எப்போதும் போல உங்களின் ஆதரவு வேண்டும் "என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com