தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி, வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள், பார்கள் மூடப்படுகிறது.

அதேபோல், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட குறிப்பிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள், பார்களை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com