சிதம்பரம் தொகுதியில் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலை

சிதம்பரம் தொகுதியில் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலை வகிக்கிறார்.
சிதம்பரம் தொகுதியில் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலை
Published on

சிதம்பரம்,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி வேட்பாளவர் திருமாவளவன் 2, 55, 185 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதன்படி அவர் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க வேட்பாளர் சந்திரஹாசன் 2,07, 565 வாக்குகள் பெற்றுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com