'ராமர் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் நாட்டை ஆள்வார்கள்' - யோகி ஆதித்யநாத்

ராமரின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் நாட்டை ஆள்வார்கள் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கைசர்கன்ச் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இந்த தேர்தல் ராம பக்தர்களுக்கும், ராமரின் துரோகிகளுக்கும் இடையிலான போட்டி. நாடு முழுவதும் மோடி அரசுக்கு ஆதரவாக மக்கள் கோஷங்களை எழுப்புகிறார்கள். அயோத்தியில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிராக இருந்தனர். ஆனால் இன்று நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு எதிராக இருந்தவர்கள். அதுமட்டுமின்றி அவர்கள் ராம பக்தர்களுக்கும் எதிரானவர்கள். ராமரின் துரோகிகளால்தான் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியும். ராமரின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் நாட்டை ஆள்வார்கள் என்பதை எதிர்கட்சிகளிடம் கூற விரும்புகிறேன்."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com