திருச்சி: இலங்கை மறுவாழ்வு முகாமில் இருந்து வாக்களித்த முதல் பெண்

இந்தியாவில் முதல் முறையாக இலங்கை மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு பெண் தேர்தலில் வாக்களித்துள்ளார்.
திருச்சி: இலங்கை மறுவாழ்வு முகாமில் இருந்து வாக்களித்த முதல் பெண்
Published on

திருச்சி,

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்கு பதிவாகியுள்ளது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் இளம் தலைமுறை வாக்காளர்கள் பலர் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த நிலையில், இந்தியாவில் முதல் முறையாக இலங்கை மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு பெண் தேர்தலில் வாக்களித்துள்ளார். திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவரான நளினி, கடந்த 1986-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் பெற்றோருக்கு பிறந்தார்.

நளினி பிறந்த ஆண்டை கணக்கில் கொண்டு, இந்திய குடியுரிமை சட்டத்தின் கீழ் இந்தியராக கருதப்பட்ட இவருக்கு முதலில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்திய பாஸ்போர்ட்டை ஆதாரமாக வைத்து, வாக்காளர் அடையாள அட்டைக்கு இவர் விண்ணப்பித்தார். இந்தியாவில் பிறந்தவர் என்ற அடிப்படையில் நளினிக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் நளினி தனது வாக்கை செலுத்தினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com