தேனியில் டிடிவி தினகரன் பின்னடைவு

திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 58,313 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தேனியில் டிடிவி தினகரன் பின்னடைவு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தேனி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 27,025 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 58,313 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அதிமுக (வி.டி.நாராயணசாமி) - 16,616

நாதக (டாக்டர் மதன் ஜெயபால்) - 7,229

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com