விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் முன்னிலை

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் முன்னிலையில் உள்ளார்.
விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் முன்னிலை
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் 6,532 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 6,236 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com