ஆந்திராவில் வாக்கு எந்திரங்கள் அடித்து உடைப்பு

சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் வாக்கு எந்திரங்கள் அடித்து உடைப்பு
Published on

அமராவதி,

ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், மாநிலத்தின் சித்தூர், கடப்பா உள்பட 4 மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடியில், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் முறைகேடு செய்ய முனைவதாக 2 கட்சியினரும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டதால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த மோதலில் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குச்சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, மாநிலத்தின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் இருகட்சி தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் நிலவி வருவதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com