பா.ஜனதா கூட்டணியிலேயே நீடிப்போம் - தெலுங்கு தேசம் உறுதி

‘இந்தியா’ கூட்டணியை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் கனகமேடலா ரவீந்திர குமார் கூறியுள்ளார்.
பா.ஜனதா கூட்டணியிலேயே நீடிப்போம் - தெலுங்கு தேசம் உறுதி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதை பயன்படுத்தி, பா.ஜனதா கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை இழுக்க 'இந்தியா' கூட்டணி முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுபற்றி தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் கனகமேடலா ரவீந்திர குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆந்திராவில் பா.ஜனதா, ஜனசேனா ஆகிய கட்சிகளுடனான எங்கள் கூட்டணி, அரசியல் கணக்கு மட்டுமின்றி நம்பகத்தன்மை சம்பந்தப்பட்டது. எனவே, பா.ஜனதா கூட்டணியிலேயே நீடிப்போம். 'இந்தியா' கூட்டணியை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. பா.ஜனதாவுடனான எங்கள் கூட்டணி, ஆந்திராவின் வளர்ச்சிக்கான பாதை ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திர பிரதேச நிலவரம்: தெலுங்கு தேசம் 16, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-4, பா.ஜ.க.-3, ஜே.என்.பி.-2 இடங்களில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com