உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்த ஜி20 தலைமை ஒப்பற்ற வாய்ப்பு - நிர்மலா சீதாராமன்

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்த ஜி20 தலைமை ஒப்பற்ற வாய்ப்பு என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்த ஜி20 தலைமை ஒப்பற்ற வாய்ப்பு - நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி,

ஜி20 நாடுகள் அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தநிலையில், மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:-

சர்வதேச சவால்களை சமாளிக்கவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டவும் மக்களை மையமாக கொண்ட செயல்திட்டத்தை இந்தியா வழிநடத்தி வருகிறது. இந்த சர்வதேச சவால்கள் நிறைந்த தருணத்தில், உலக பொருளாதார வரிசையில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்த ஜி20 தலைமை பதவி இந்தியாவுக்கு ஒப்பற்ற வாய்ப்பாக அமைந்துள்ளது. உலகமே ஒரு குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்ற கொள்கையுடன் இந்த சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com