

சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
‘தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவு வசதியுடன் விளையாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ/மாணவிகளுக்கான சேர்க்கைக்கு 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 01.07.2001 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவும், 01.07.2009 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் மாணவ/மாணவியர்கள் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர்க்கப்படுவர். தேசிய, மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதுநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படிப்பில் சேர்வதற்காக இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலைப் படிப்பின் போது சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
30.03.2026 அன்று காலை 7.00 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆண் & பெண், தடகளம், பளுதூக்குதல், ஜுடோ, வாள்விளையாட்டு, கையுந்துபந்து, ஹாக்கி மற்றும் கால்பந்து ஆண்கள் பிரிவு ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மேலும் அதே நாளில் காலை 7.00 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் ஆண் & பெண், கூடைப்பந்து குத்துச்சண்டை கைபந்து மற்றும் கால்பந்து பெண்கள் பிரிவு ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வுகள் நடைபெறும்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ/மாணவியர்கள், சிறப்பு நிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை 13.03.2026 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி நாள்: 26.03.2026 அன்று மாலை 5.00 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.