இந்திய அணி வீராங்கனை ஷபாலிக்கு, பிரெட்லீ பாராட்டு

இந்திய அணி வீராங்கனை ஷபாலி வர்மாவுக்கு, பிரெட்லீ பாராட்டு தெரிவித்துள்ளார்.
Published on


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ நேற்று அளித்த ஒரு பேட்டியில், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு போதும் இறுதிப்போட்டிக்கு எட்டியது கிடையாது. ஆனால் தற்போதைய இந்திய அணி வித்தியாசமானது. அதற்குரிய தகுதியுடன் இருக்கிறது. ஷபாலி வர்மா, பூனம் யாதவ் என்ற மேட்ச் வின்னர் கூட்டணி அவர்களிடம் இருக்கிறது. ஷபாலி தொடர்ந்து ரன் குவித்து வருகிறார். இந்தியாவின் டாப் வரிசையில் பயமற்ற ஒரு பேட்டிங்கை கொண்டு வந்திருக்கிறார். அவரது ஆட்டத்தை பார்க்கவே அற்புதமாக உள்ளது. பூனம் யாதவ் சுழற்பந்து வீச்சில் கலக்குகிறார். மேலும் சில சிறந்த வீராங்கனைகளும் உள்ளனர். எனவே முழு நம்பிக்கையுடன் இந்திய வீராங்கனைகள் அரைஇறுதியில் களம் காண்பார்கள். எதிரணி சிறப்பு வாய்ந்த மிகப்பெரிய முயற்சியை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணி இறுதிப்போட்டியில் நுழைவதை தடுக்க முடியும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com