பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது சோயிப் அக்தர் விமர்சனம்

பாகிஸ்தான் அணிக்கு டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாக பதிவாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது சோயிப் அக்தர் விமர்சனம்
Published on

இஸ்லாமாபாத்,

டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. கொழும்புவில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் 18 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி, பாகிஸ்தான் அணிக்கு டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீர சோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும், வீரர்களையும் கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறுகையில்

'கிரிக்கெட் பற்றியே தெரியாத ஒருவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக்கினால் (மொசின் நக்வி) என்ன செய்ய முடியும்? அவ ரால் அணியை எப்படி திறம்பட நிர்வகிக்க முடியும் ? உலகிலேயே மிகப் பெரிய குற்றம் என்வென்றால், தகுதியில்லாத ஒருவரிடம் பெரிய பொறுப்பை வழங்குவது தான். இத்தகைய நபர்கள் கிரிக்கெட் அமைப்பை பயே அழித்து விடுவார்கள்.பாபர் அசாமை சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறீர்கள். அவரால் ஒரு ஆட் டத்தை கூட வென்று கொடுக்க முடியவில்லை. இது மாதிரியான நட்சத்திர அந்தஸ்து கொண்ட வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவதே இது போன்ற தோல்விக்கு காரணமாகும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com