

பெங்களூரு,
கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்தில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் அவரது குழுவினரின் தொடர் முயற்சியால் மைதானத்தில் போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, மைதானத்தின் நுழைவுப்பகுதி அகலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் நினைவாக சின்னசாமி மைதானத்தில் 11 காலி இருக்கைகள் காலியாக விட கர்நாடகா கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் நினைவுக் கல்வெட்டு திறக்கவும் திட்டமிட்டுள்ளனர்.