14 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றது

14 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றது
14 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றது
Published on

கராச்சி,

குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நேற்று காலை பாகிஸ்தான் சென்றடைந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி அங்கு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி கராச்சியில் தொடங்குகிறது. பாகிஸ்தான் புறப்படுவதற்கு முன்பாக தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை. பாகிஸ்தானிலும் கொரோனா பரிசோதனை நடைமுறை முடிந்ததும் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com