2 பேட்ஸ்மேன்களும் ஒரே முனையில்.. எளிதான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்ட பாக்... ரசிகர்கள் கிண்டல்


2 பேட்ஸ்மேன்களும் ஒரே முனையில்.. எளிதான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்ட பாக்... ரசிகர்கள் கிண்டல்
x

பாகிஸ்தான் - வங்காளதேசம் ஆட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 5-வது லீக்கில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச கேப்டன் ஜேக்கர் அலி பந்துவீச்சை செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது ஹாரிஸ் 31 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், மெஹதி ஹசன், ரிஷாத் ஹூசைன் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்களே அடித்தது. இதனால் பாகிஸ்தான் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. சூப்பர் 4 சுற்றில் 2-வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டது. குறிப்பாக ஷாகீன் அப்ரிடி வீசிய ஒரு ஓவரில் பாகிஸ்தான் அணி எளிதான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டது. ஷாகீன் அப்ரிடி வீசிய பந்தை எதிர்கொண்ட தவ்ஹித் ஹிரிடோய் பேக்வேர்டு பாயிண்ட் திசையில் அடித்தார். அதனை சைம் அயூப் அற்புதமாக தடுத்தார்.

இதனை கவனிக்காத மறுமுனையில் இருந்த சைப் ஹசன் ரன் எடுக்க அவசரப்பட்டு ஓடி பேட்ஸ்மேன் முனைக்கு சென்றுவிட்டார். இதனால் பாகிஸ்தான் அணிக்கு எளிதாக ரன் அவுட் செய்யும் வாய்ப்பு உருவானது. பந்தை பிடித்த அயூப் பவுலர் முனை ஸ்டம்ப் நோக்கி வீசினார். பந்து ஸ்டம்ப் மீது படாமல் தாண்டி சென்றது. அந்த முனையில் பந்தை பிடிக்க பாகிஸ்தான் வீரர்கள் யாருமில்லை. இருப்பினும் மற்றொரு பாகிஸ்தான் வீரர் தடுத்தார். ஆனால் பந்தை சரியாக பிடிக்காமல் கோட்டை விட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சைப் ஹசன் மீண்டும் கிரீசுக்குள் வந்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை கிண்டலடித்து வருகின்றனர்.

1 More update

Next Story