ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதும் 20 ஓவர் கிரிக்கெட்; இன்று நடக்கிறது

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதும் 20 ஓவர் கிரிக்கெட்; இன்று நடக்கிறது
Published on

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று (இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு) நடக்கிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று (இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு) நடக்கிறது. இந்த ஆண்டு கடைசியில் 20 ஓவர்உலக கோப்பை போட்டி வருவதால் அதை மனதில் கொண்டு அணியை சரியான கலவையுடன் எப்படி வலுப்படுத்துவது என்ற திட்டமிடலுடன் இந்த போட்டியில் இரு அணியினரும் ஆடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் கப்தில், டிம் செய்பெர்ட், கிளைன் பிலிப்ஸ், டேவோன் கான்வே, டிரென்ட் பவுல்ட், ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.15 கோடிக்கு விலை போன கைல் ஜாமிசன் என்று நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் மெகா தொலைக்கு ஏலம் போன மேக்ஸ்வெல், வேகப்பந்து வீச்சாளர் ஜய் ரிச்சர்ட்சன் களம் இறங்குகிறார்கள். இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 7-ல் ஆஸ்திரேலியாவும், 2-ல் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com