20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நடக்கிறது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயன் மார்கன் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி வருமாறு:-

இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரண், கிறிஸ் ஜார்டன், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க்.

இங்கிலாந்து அணியில் பிரபல வீரர் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. மனநலத்துக்கு முக்கியத்துவம் அளித்து விளையாட்டிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com