2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை 9 அணிகளும் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு..?

image courtesy:ICC
3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை கைப்பற்றியது.
துபாய்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என்பது 2 ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் முடிவை உள்ளடக்கியதாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிமுகப்படுத்தியது.
முதலாவது சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் 2021-ம் ஆண்டில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்றது. 2023-ம் ஆண்டில் நடந்த 2-வது சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை உச்சிமுகர்ந்தது. இதைத் தொடர்ந்து 9 அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-ம் ஆண்டில் தொடங்கியது. இதில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இந்தியா இறுதி சுற்றை நெருங்கி வந்தது.
ஆனால் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரிலும் அடைந்த மோசமான தோல்வியால் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை பறிகொடுத்து 3-வது இடத்துக்கு (50 சதவீத புள்ளி) தள்ளப்பட்டது. தென் ஆப்பிரிக்கா முதலிடத்தையும்(69.44 சதவீத புள்ளி), ஆஸ்திரேலியா 2-வது இடத்தையும் (67.54 சதவீத புள்ளி) பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நியூசிலாந்து 4-வது இடத்தையும், இங்கிலாந்து 5-வது இடத்தையும் பெற்றன.
இதனையடுத்து 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த தொடரில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா முதல் கடைசி இடம் பெற்ற பாகிஸ்தான் வரை 9 அணிகளும் பெற்ற பரிசுத்தொகை விவரம் பின்வருமாறு:-
1. தென் ஆப்பிரிக்கா - 30.75 கோடி
2. ஆஸ்திரேலியா - 18.5 கோடி
4. நியூசிலாந்து - 10.26 கோடி
5. இங்கிலாந்து - 8.20 கோடி
6. இலங்கை - 7.18 கோடி
7. வங்காளதேசம் - 6.15 கோடி
8. வெஸ்ட் இண்டீஸ் - 5.13 கோடி






