2024 டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது ? - வெளியான தகவல்

2024 டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2024 டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது ? - வெளியான தகவல்
Published on

புதுடெல்லி,

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த நிலையில், 2024 டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளின்  அட்டவணை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதனை தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

குரூப் சுற்றில் இந்திய அணியின் மாதிரி போட்டி அட்டவணை :

*ஜூன் 5 - இந்தியா - அயர்லாந்து.

*ஜூன் 9 - இந்தியா - பாகிஸ்தான்.

*ஜூன் 12 - இந்தியா- அமெரிக்கா.

*ஜூன் 15 - இந்தியா - கனடா.

2024 டி20 உலககோப்பை தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com